ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி

ஐ.சி.சி.யின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று அரையிறுதி போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரவீன் ஷா (41), மன்ஜோட் கல்ரா (47) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த சுப்மேன் கில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருடன் விளையாடிய ஹார்விக் 20 ரன்களுடன் வெளியேறினார். அதன்பின் அனுகுல் (33), சிவம் மவி (10) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களே எடுத்தனர். போட்டியின் முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 273 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இம்ரான் ஷா (2) மற்றும் முகமது ஆலம் (7) ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனை அடுத்து நசீர் (18), ஆசிப் (1), அம்மட் ஆலம் (4), டஹா (4), சாத் கான் (15), ஹசன் கான் (1), அப்ரிடி (0) மற்றும் இக்பால் (1) ரன்களில் ஆட்டமிழந்தனர். மூசா (11) ஆட்டமிழக்காமல் உள்ளார். அந்த அணி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

காணொளி

Most Liked!