65th NATIONAL FILM AWARDS FOR 2017 BEST TAMIL FILM To Let Producer: Prema Chezhian Director: Chezhiyan Rajat Kamal and 1,00,000/- each to the Producer and Director

தமிழில் சிறந்தத் திரைப்படம் – டூ லெட் (To Let)

டூ லெட் திரைப்படத்தைப் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ளார். (பரதேசி, தாரை தப்பட்டை, ஜோக்கர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செழியன். தமிழின் பிரபல ஒளிப்பதிவாளராக உள்ள இவர் 2 ஆவண படங்களை இயக்கியுள்ளார்)

2007-ல மென்பொருள் துறை தாக்கதுனால சென்னையில ஏற்பட்ட மாற்றங்களை மையமா வெச்சுப் படம் எடுக்கப்பட்டிருக்கு. அதாவது, ஐ.டி துறையினால சென்னையில ஏகப்பட்ட மாற்றங்கள் வந்திருக்கு. மக்கள் சென்னையைச் சுற்றியுள்ள இடங்களுக்குக் குடியேறுனாங்க. பொருளாதாரக் காரணமாக சென்னைக்குள்ள அவங்களால குடியிருக்க முடியாத சூழ்நிலை உருவாச்சு. வேலை சென்னைக்குள்ள இருக்கும். ஆனா, வீடு சென்னைக்கு வெளிப்புறத்துல இருக்கும்.  ஷீலா ராஜ்குமாரும்  சந்தோஷ் நம்பிராஜன் நடித்த டூ லெட் .

 இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை தொகுத்து எடுக்கப்பட்ட படமாகும். இதில் ஒரு சிறிய குடும்ப, இரு சக்கர வாகனத்தில் வாடகை வீடு தேடி அலைகிறது. தற்போது வசிக்கும் இல்லத்தில் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்திய நிலையில் மற்றொரு வாடகை வீடு கண்டுபிடித்து மாற 30 நாட்களே உள்ளன. இறுதியில் இந்த சிறிய குடும்பம் தங்களுக்கான வசிப்பிடத்தை கண்டுப்பிடிப்பார்களா என்பதே கதையின் முடிவு. சமூக உண்மைகளை எடுத்துரைக்கும் இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளிவராத நிலையிலும், சிறந்த தமிழ்த் திரைப்பட  விருதை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுயாதீனப் படங்கள் ஓடாதுனு பரவலான ஒரு கருத்து இருக்கு. கமர்ஷியல் ஹீரோவை வெச்சுப் பல கோடி செலவுல படம் பண்றதைவிட, ஒரேயொரு படம் கதைக்காக பண்ணலாம். அதோட ரீச் நமக்கு வேற லெவல் பக்குவத்தைக் கொடுக்கும். தமிழ்ல சுயாதீனப் படங்கள் (Independent movies) மிகக் குறைவு. இந்தப் படம் விருது வென்றதன் மூலமா, சுயாதீனப் படங்கள் தமிழ்ல அதிகரிக்கலாம்.



காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!