சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

எங்கேயும் எப்போதும் , இவன் வேற மாதிரி,  வலியவன்  ஆகிய படங்களை இயக்கிய சரவணன் கடைசியாக இயக்கிய படம்  சக்ரவியூஹா  என்ற கன்னட படமாகும். இந்த படம் கடந்த 2016-ல் வெளியானது. இந்த பட வெளியீட்டுக்குப் பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்த சரவணன் இப்போது மீண்டும் படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அடுத்து சரவணன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு ஆக்‌ஷன் கதையை தயார் செய்துள்ளார், என்றும் இந்த கதையில் த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்து அதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், இந்த கதையில் த்ரிஷா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து நாம் த்ரிஷா தரப்பில் விசாரித்தபோது,  பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது, முடிவானதும் தெரிவிக்கிறேன்  என்ற பதிலே கிடைத்தது. சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் த்ரிஷா, சரவணன் எழுதியிருக்கும் கதையில் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!

இந்த படத்தைதொடர்ந்து  சதுரம்-2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும்.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர்  படத்தில் சிம்ரனுடன் நடிக்கும் புதிய படத்தின்  படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரம் துவங்க இருக்கிறது என்றும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, ஒளிப்பதிவை சரவணன் ராமசாமி கவனிக்க, படத்தொகுப்பை சான் லோகேஷ் செய்ய இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இப்போது ஜீவா, ஷாலினி பாண்டே நடிக்க  கொரில்லா  என்ற படத்தை தயாரித்து வரும்  ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை கொடைக்கானல், பிச்சாவரம் மற்றும் கேரளாவில் நடைபெறவிருக்கிறது.

காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!