சின்னத்திரை நடிகர் சங்கம்

 தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு அலுவலகம் அமைய தமிழக அரசு உதவ வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

அண்மையில் நடந்த தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகளான தலைவர் அ.ரவிவர்மா, பொதுச் செயலாளர் ஆடுகளம் நரேன், பொருளாளர் ஜெயந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் நேற்று (பிப்ரவரி 27) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது முதல்வரிடம் இரு முக்கியமான கோரிக்கைகளை வைத்ததாக  சங்க தலைவர் ரவி வர்மா தெரிவித்தார்.

முதல்வர் எங்களை கனிவோடு உபசரித்து வாழ்த்தினார். அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு முக்கியமான இரு கோரிக்கைகளையும் முன்வைத்தோம். சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இடமில்லாமல் 15 ஆண்டுகளாக கஷ்டப்படுகிறோம். எனவே அரசு சார்பில் சென்னையில் மூன்று கிரவுண்டுக்கும் குறைவில்லாத வகையில் நிலம் அளித்து உதவ வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு நிலம் ஒதுக்கினால் கலை நிகழ்ச்சி நடத்தி அந்த இடத்தில் கட்டிடம் கட்டும் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அந்த கட்டிடத்துக்கு அரசே பெயர் சூட்ட வேண்டுமென்றும் முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அடுத்து நலிவடைந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குமாறும் கோரிக்கை வைத்தோம். இரு கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்  என்று நம்மிடம் தெரிவித்தார் ரவிவர்மா.


காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!