தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

கனா  மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் தனது 2வது படத்திற்காக பிளாக் ஷீப்  யு ட்யூப் சேனல் பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பும் ஆரம்பமானது. கார்த்திக் வேணுகோபால் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தில் விஜய் டிவி  சரவணன் மீனாட்சி  புகழ் ரியோ கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குறைந்த நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது டப்பிங் பணிகளில் மும்முரமாக இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு  நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா  என டைட்டில் வைத்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினை வித்தியாசமான முறையில்  சூப்பர் டீலக்ஸ்  டிரைலர் பாணியில் உருவாக்கி வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை ஆர்.ஜே. விக்னேஷ் எழுதியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஃபென்னி ஆலிவர் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார்.

காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

https://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

Comments

Leave a Comment

Most Liked!