சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சுந்தர்.சி தற்போது விஷால், தமன்னா நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக அஸர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முத்தின கத்திரிக்காய், அரண்மனை 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பின் சுந்தர் சி நடித்து வரும் திரைப்படம்  இருட்டு . முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற படங்களை இயக்கிய துரை இந்த படத்தை இயக்கிவருகிறார்.

இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. சுந்தர் சி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை படத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.


காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

https://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

Comments

Leave a Comment

Most Liked!